நெருக்கடியிலிருந்து மீள IMF யின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியம் - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 1, 2023

நெருக்கடியிலிருந்து மீள IMF யின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியம் - எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.மனோசித்ரா)

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வருமான வரி அதிகரிப்பினால் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒக்கமுரா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் புதன்கிழமை (31) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழுவினரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மேலெழுந்து வரும் பொருளாதார நிலை குறித்து விரிவாக விளக்கமளித்த எதிர்க்கட்சித் தலைவர், வீழ்ச்சியடைந்துள்ள பல்வேறு துறைகள் தொடர்பிலும் பிரதிநிதிகள் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

இலங்கை இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நிலையில் இருந்து மீள்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முறையான நிதி முகாமைத்துவத்துக்கு அரசாங்கத்துக்குத் தேவையான செல்வாக்கை பிரயோகிக்குமாறும், வருமான வரி அதிகரிப்பு காரணமாக நாட்டு மக்கள் தாங்க முடியாத அழுத்தத்திலும் கஷ்டத்திலும் வாழ்ந்து வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.

வீழ்ச்சியடைந்துள்ள துறைகள் குறித்து ஒவ்வொன்றாக விளக்கமளித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நிலையில் இருந்து இலங்கை மீள்வதற்கு கால அவகாசம் தேவை எனவும் தெரிவித்தார்.

இலங்கைப் பொருளாதாரத் திட்டத்தின் அண்மைய முன்னேற்றப் போக்குகள், எதிர்காலத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள், தடைகள் மற்றும் நிலவி வரும் தாமதங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment