பரீட்சார்த்தி மீது தாக்குதல் : கணித பாடத்தின் இரண்டாம் பகுதிக்கு தோற்ற முடியாது போன மாணவன்! - News View

About Us

About Us

Breaking

Thursday, June 8, 2023

பரீட்சார்த்தி மீது தாக்குதல் : கணித பாடத்தின் இரண்டாம் பகுதிக்கு தோற்ற முடியாது போன மாணவன்!

பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவர் மீது மாணவர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியதால் கணித பாடத்தின் இரண்டாம் பகுதிக்கு  தோற்ற முடியாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் உள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர் ஒருவர் மீது மாணவர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியதால் இரண்டாம் பகுதி கணிதப் பாடத்துக்குத் தோற்ற முடியாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான மாணவன், கணிதம் முதலாவது பகுதி வினாத்தாளை எழுதிய பின்னர் குறித்த பாடசாலையிலுள்ள சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் கிரிக்கெட் விக்கெட்டினால் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவன் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் அன்றையதினம் நடைபெற்ற இரண்டாவது பகுதி கணிதப் பாடத்துக்கு முகங்கொடுக்க முடியாமல் போயுள்ளது.

இந்நிலையில், குறித்த மாணவன் புதன்கிழமை (07) இடம்பெற்ற பாடத்துக்கு தோற்றுவதற்காக வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவனைத் தாக்கிய சம்பவத்துடன் 7 மாணவர்கள் தொடர்புபட்டுள்ளதாகவும் பரீட்சையின் பின்னர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment