இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மீண்டும் அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 8, 2023

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மீண்டும் அதிகரிப்பு

நாட்டின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த மே மாதத்தில் 26.2 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, மே மாதத்தில் அந்நியச் செலாவணி 3.4 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

சீன மக்கள் வங்கியினால் 1.4 பில்லியன் டொலர் பரிமாற்றம் வசதியும் இந்த அந்நிய செலாவணியில் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதத்தில் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி 2.7 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த மே மாதத்தில் 26.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

இதன்படி, கடந்த மே மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 3,483 மில்லியன் (3.5 பில்லியன்) அமெரிக்க டொலர்களாக பதிவானதாக, மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 

கடந்த ஏப்ரலில் நாட்டின் அதிகாரப்பூர்வ கையிருப்பு 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

No comments:

Post a Comment