இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, June 8, 2023

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

பெண்கள் தம்மை வெண்மையாக்கிக் கொள்வதற்காக பயன்படுத்தப்படும் கிரீம் வகைகள் மற்றும் லோஷன்களில் இருக்க வேண்டிய பாதரசத்தின் அளவு, அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருப்பதாக இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவன அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இது தொடர்பில் கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபை பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி ஈ. யு. ரஞ்சனா மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த வாரம் நுகர்வோர் அதிகார சபையின் விசேட அதிரடி சோதனைப் பிரிவினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளரின் விபரங்களின்றி சட்டவிரோத லோஷன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றில் 07 வகையான உடல் பூச்சு கிரீம்கள் மற்றும் லோஷன்களில் 06 வகையான பாதரசத்தின் அளவு ஒரு கிலோவுக்கு 8.1 மில்லி கிராமிலிருந்து 31.540 மில்லி கிராம் வரை மிக அதிகமாக இருந்ததாக இலங்கை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆய்வுகூட அறிக்கைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் உடலை வெண்மையாக்கும் உடல் பூச்சு கிரீம்களில் பாதரசம் அதிகம் உள்ளது. இதனால், புற்றுநோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், ஒவ்வொரு உறுப்புக்கும் பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான கிரீம்கள் மற்றும் திரவங்களை கொள்வனவு செய்யும் போது, ​​குறிப்பாக இறக்குமதியாளரின் பெயர் மற்றும் முகவரி மற்றும் உற்பத்தி நாட்டின் பெயர் மற்றும் முகவரி எழுதப்பட்டுள்ளதா? என்பதை பரிசோதிக்க வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment