பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் பாரிய விடயங்கள் எதுவும் இல்லை - இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் - News View

About Us

Add+Banner

Saturday, May 6, 2023

demo-image

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் பாரிய விடயங்கள் எதுவும் இல்லை - இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர்

_114028645_u.r.desilva
(எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதைப்போன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் பாரிய விடயங்கள் எதுவும் இல்லை. உலகில் ஏனைய நாடுகளில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு நிகரான சட்டமூலமே தற்போது தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் சட்டமூலத்தில் ஒரு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் யூ.ஆர்.டி சில்வா தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக எதிர்க்கட்சிகளால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், உலகில் எந்த நாட்டிலும் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திலும் பயங்கரவாதம் என்றால் என்ன என வரைவிலக்கணம் படுத்தியதில்லை.

பயங்கரவாதம் என்ற சொல் விசாலமான கருத்தைக் கொண்டது. அதனால் பயங்கரவாத தடைச் சட்டம் இருக்கும் நாடுகள் தங்களின் நாட்டுக்கு ஏற்ற வகையில் பயங்கரவாத செயற்பாடுகளை பட்டியலிட்டு வரைவிலக்கணப்படுத்தி இருக்கின்றன.

அதன் பிரகாரமே எமது நாட்டும் மேற்கொண்டு இருக்கிறது. அதனால் சட்டமூலத்தில் பயங்கரவாதம் தொடர்பில் வரைவிலக்கனப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல.

அத்துடன் தற்போது அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் தற்காலிகமாக கொண்டுவருவதாக தெரிவித்து தற்போது 40 வருடங்களுக்கும் அதிக காலம் அமுல்படுத்தி வருகிறோம். அதில் இருக்கும் பயங்கரமான விடயங்கள் காரணமாகவே சர்வதேச நாடுள் உட்பட மனித உரிமை அமைப்புகள் பயங்கரவாத தடைச் சடத்தை நீக்குமாறு தெரிவித்து வந்தன.

அதன் பிரகாரமே தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கொண்டுவந்திருக்கிறோம். பயங்கரவாத தடைச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் தடுப்புக்காவல் நீடிப்பு அதிகாரம் எந்தளவு பயங்கரமானது என்பதை சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை எந்த குற்றமும் இல்லாமல் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்து வந்ததன் மூலம் உணர்ந்துகொள்ள முடிந்தது.

மேலும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திலும் தடுப்புக் காவல் உத்தரவு அதிகாரம் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டிருப்பது தொடர்பாகவே பெரியளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் இந்த அதிகாரத்தை மீண்டு ஜனாதிபதிக்கு கீழ் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தால் அதில் மாற்றம் செய்யலாம்.

அதேநெரம் ஒரு சில பொலிஸாரின் தவறான செயற்பாட்டினால் குற்றமற்ற நபர்கள் சிறைச்சாலைகளில் நீண்ட காலம் சாதாரண சட்டத்தின் கீழ் இருந்து வருகின்றனர். அப்படியானால் இந்த சட்டத்தையும் மாற்ற வேண்டும்.

அத்துடன் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தடுப்புக்காவல் உத்தரவு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் பாரியளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டி திருத்தம் என்னவென்றால், பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தடுப்புக்காவல் உத்தரவு அதிகாரம் வழங்கினாலும் சந்தேகநபரை 48 மணி நேரதத்துக்குள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும் என சட்டமூலத்தில் இருக்கிறது.

இந்த இடத்தில் சந்தேகநபருக்கு நீடிக்கப்படும் பொலிஸ் தடுப்புக்காவல் நியாயமானதா என ஆராய்ந்து தீர்மானிக்க முடியுமான வகையில் திருத்தம் மேறகொள்ளப்பட வேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம்.

அதனால் எதிர்க்கட்சிகள் தெரிவிப்பதுபாேல் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் பயங்கரமான விடயங்கள் எதுவும் இல்லை. உலகில் ஏனைய நாடுகளில் இருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டங்களைப் போன்றே தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அமைந்திருக்கிறது. அதேநேரம் சட்டமூலத்தில் ஒரு சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றன என்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *