சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 2 விமானங்கள், அம்பாந்தோட்டை, மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் பெய்த கடுமையான மழை காரணமாக, விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்குவதில் ஏற்பட்ட நிலை காரணமாக நேற்றிரவு மற்றும் நள்ளிரவு அளவில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 11.35 மணியளவில் 297 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்களுடன் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து வந்த முதலாவது விமானம் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கபட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 12.02 மணியளவில் மாலைதீவின் மாலேயில் இருந்து வந்த கட்டுநாயக்க வந்த விமானமொன்று மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விமானங்களில் வந்த பயணிகளுக்கு உரிய போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.
No comments:
Post a Comment