எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி வரை ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் அரசாங்கம் கொண்டுள்ள பங்குகளை விற்பனை செய்யப் போவதில்லை என நிதி அமைச்சின் செயலாளர் உயர் நீதிமன்றிற்கு உறுதியளித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கைமாற்றுவதற்கு எதிராக தொலைத்தொடர்பு தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் இருவர் சமர்ப்பித்த மனு இன்றையதினம் (08) எடுத்து கொள்ளப்பட்ட போதே அவர் இதனை உறுதியளித்தார்.
இதன்போது குறித்த பங்குகளை மாற்றும் செயன்முறை முற்றிலும் சட்டபூர்வமானது என, நிதி அமைச்சின் செயலாளர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த மனு விசாரணை எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அது வரை குறித்த பங்குகளை கைமாற்றப்படமாட்டாது என நிதி அமைச்சின் செயலாளர் உயர் நீதிமன்றில் உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment