அனுமதிப்பத்திரம் இன்றேல் வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 7, 2023

அனுமதிப்பத்திரம் இன்றேல் வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்

றிஸ்வான் சேகு முஹைதீன் 

5 வருடங்களுக்கு மேல் வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அநுருத்த அறிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த வாகனங்களை திணைக்களத்தின் தகவல் கட்டமைப்புத் தொகுதியிலிருந்து நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது சுமார் 83 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் சுமார் 60 இலட்சம் வாகனங்கள் மாத்திரமே எரிபொருள் QR குறியீட்டிற்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, 5 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களை, மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகரின் உதவியுடன், அவை பயன்படுத்தப்படாத நிலையில் இருப்பின் திணைக்களத்தின் தகவல் தொகுதி கட்டமைமைப்பில் இருந்து அவற்றை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment