முடிசூட்டு விழாவுக்கு சென்ற ஜனாதிபதி நாடு திரும்பினார் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 7, 2023

முடிசூட்டு விழாவுக்கு சென்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியாவிற்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை நாடு திரும்பினார்.

மே 06ஆம் திகதி இடம்பெற் பிரிட்டனின் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த கடந்த வியாழக்கிழமை (04) பிரிட்டன் நோக்கி பயணமானார்.

அவருடன் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் இப்பயணத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 06 ஆம் திகதி சனிக்கிழமை ஐக்கிய இராச்சியத்தின் (UK) வெஸ்ட்மின்ஸ்டர் அபே அரச குடும்ப தேவாலயத்தில் நடைபெற்ற குறித்த முடிசூட்டு விழாவில் உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட சுமார் 8,200 பேரிலிருந்து, இம்முறை முடிசூட்டு விழாவிற்கு விருந்தினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 2,200 பேருக்கே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவராவார்.

No comments:

Post a Comment