(எம்.ஆர்.எம்.வசீம்)
இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சி அரசியல் சபை கூட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (07) கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாம் தற்போது வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளோம். அதன் மூலம் இந்நாட்டு மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்து கொண்டு இறுதி காலாண்டாகும்போது அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
அதனால்தான் பணம் சேகரித்துக் கொண்டு, வருமானத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசாங்கம் எதிர்ப்பார்க்கும் இலக்கை எட்ட முடியுமானால் அரச ஊழியர்களுக்கு அந்த நன்மையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.
மேலும் தற்போதை வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் அரச ஊழியர்களின் சம்பளம் அவர்களின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல போதுமானதாக இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திலே அரச ஊழியர்களுக்கு இறுதியாக 10 ஆயிம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுத்தது என்றார்.
No comments:
Post a Comment