க.பொ.த. உயர் தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு ஆசிரியர்களிடமிருந்து போதுமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2022 க.பொ.த உயர் தர பரீட்சை (2023) விடைத்தாள் மதிப்பீடு நடவடிக்கைகளுக்கு ஒன்லைன் (Online) முறை மூலம் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்ட நிலையில், அது இன்றுடன் நிறைவடைகின்றது.
ஆயினும் 11 பாடங்களுக்கான விடைத்தாள்களை திருத்துவதற்கான விண்ணப்ப காலம் நாளை (04) நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுவரை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பிக்காத ஆசிரியர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் எனவும், தமது பிள்ளை அல்லது குடும்ப உறுப்பினர்கள் பரீட்சைக்கு தோற்றி இருப்பின் அவர்கள் தோற்றிய பாடமல்லாத ஏனைய பாடங்களுக்கான மதீப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2022 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் ஒய்வுபெற்ற ஆசிரியர்களும் விண்ணப்பிக்க முடியும் எனவும், தகைமைகளை கொண்டுள்ள க.பொ.த உயர் தரப் பாடத்தினை கற்பிக்கும் ஆசிரியர்கள் https://onlineexams.gov.lk/eic எனும் இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளார்கள்.
பாட இலக்கமும், பாடங்களும்
01 - பெளதிகவியல்
02 - இரசாயனவியல்
07 - கணிதம்
08 - விவசாய விஞ்ஞானம்
09 - உயிரியல்
10 - இணைந்த கணிதம்
29 - தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்
32 - வணிகக் கல்வி
65 - பொறியியற் தொழில்நுட்பவியல்
66 - உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல்
67 - தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானம்
73 - ஆங்கிலம்
No comments:
Post a Comment