இருபது தேங்காய்களை திருடிய ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம், இவருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறைத் தண்டையை விதித்துள்ளது.
திவுலபிட்டிய, கெஹேல்எல்ல பிரதேசத்திலுள்ள தென்னந்தோட்டமொன்றில் அத்துமீறி புகுந்து 20 தேங்காய்களை இந்த நபர் திருடியுள்ளார்.
இந்நிலையில், தென்னந்தோட்டத்தில் அத்துமீறி நுழைந்தமை மற்றும் தேங்காய்களை பறித்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டன.
இதில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இந்த நபரை இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையை மினுவாங்கொடை நீதவான் விதித்துள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர், இந்தக் குற்றங்களை தான் செய்யவில்லையெனத் தெரிவித்துள்ளார். எனினும், கைவிரல் அடையாளங்களின் பிரகாரம் இவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.
இதனடிப்படையில் ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறைத்தண்டனை இவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டு குற்றவாளியாக இனங்காணப்பட்ட திவுலுப்பிட்டியவைச் சேர்ந்த இந்த நபர், 2021 ஜனவரி 31ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தார்.
No comments:
Post a Comment