கட்டாயமாக்கப்பட்டது NVQ சான்றிதழ் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 2, 2023

கட்டாயமாக்கப்பட்டது NVQ சான்றிதழ்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு NVQ சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களுக்கு NVQ (National Vocational Qualifications) சான்றிதழ் இன்று முதல் கட்டாயமாக்கப்படுவதாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

28 நாள் வதிவிடப் பயிற்சியும் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார்.

28 நாள் வதிவிடப் பயிற்சியின் பின்னர் வீட்டுப் பணிகளுக்காக வௌிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு NVQ மூன்றாம் நிலை சான்றிதழ் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நிபுணத்துவத்துடனான ஊழியர்களை பணிக்கு அனுப்புவதே இதன் நோக்கமாகும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment