இலங்கையில் 38 சீனப் பிரஜைகள் கைது! - News View

About Us

About Us

Breaking

Sunday, April 2, 2023

இலங்கையில் 38 சீனப் பிரஜைகள் கைது!

கணினி குற்றங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் சீனப் பிரஜைகள் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (1) இக்கைது நடவடிக்கை இடம்பெற்றதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

நிதி மோசடி தொடர்பான கணினி குற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் குறித்த சீனப் பிரஜைகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சீனத் தூதரகத்தின் உதவியுடன் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 33 ஆண்கள், 5 பெண்களும் அடங்குவர்.

சந்தேக நபர்கள் வசமிருந்த 40 மடிக் கணினிகள், 120 கையடக்கத் தொலைபேசிகள், பல கணினி உபகரணங்கள் மற்றும் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment