இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக Prima மற்றும் Serendib நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய, கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 15 இனால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
டொலர் விலை குறைவடைந்து வருவதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (09) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகள் தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment