புதிதாக சேவையில் 2500 வைத்தியர்களை நியமிக்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 1, 2023

புதிதாக சேவையில் 2500 வைத்தியர்களை நியமிக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் அரசாங்க வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக புதிதாக 2500 வைத்தியர்களை நியமிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

மேற்படி நியமனம் தொடர்பில் நிதியமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில் நிதியமைச்சின் அனுமதி கிடைக்கப் பெற்றதும் வைத்தியர்கள் நியமனம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீசந்ரகுப்த தெரிவித்துள்ளார். 

அந்த வகையில், நாடளாவிய வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்ய முடியுமென்றும் சில துறைகளில் விசேட மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment