நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட புழக்கத்திலில்லாத 1,000 ரூபா நினைவு நாணய குற்றிகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, நேற்று (09) முதல், இந்நாணயக் குற்றிகள் விற்பனையாகத் தொடங்கியுள்ளன. 6,000 ரூபாவுக்கு இதைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்நிலையில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நாணயங்கள் வழங்கப்படவுள்ளன. ஒருவருக்கு ஒரு நாணயம் மட்டுமே விற்பனை செய்யப்படுமென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி நினைவு நாணய குற்றியை பெற்றுக் கொள்ள விரும்புவோர், மத்திய வங்கியின் விற்பனை நிலையங்களில் தமது தனிப்பட்ட அடையாள விபரங்களை சமர்ப்பித்து கொள்வனவு செய்யமுடியுமெனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த நாணய குற்றியை மத்திய வங்கியின் கருமபீடத்தில் இன்றும் கொள்வனவு செய்ய முடியும்.
அத்துடன், கொழும்பு 01 இல் அமைந்துள்ள நாணய நூதனசாலையிலும், அனுராதபுரம், மாத்தளை, மாத்தறை, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் நுவரெலியாவிலுள்ள பிராந்திய அலுவலகங்களிலும் நாணய குற்றியை பெற்றுக்கொள்ளமுடியுமென மத்திய வங்கி மேலும் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment