23 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருள் மீட்பு : கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு யுவதி கைது! - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 28, 2023

23 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருள் மீட்பு : கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு யுவதி கைது!

23 கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப் பொருள்களுடன் வெளிநாட்டு பெண்ணொருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பெண்மணி 26 வயதுடைய பொலிவியா நாட்டுப் பிரஜையென்றும் அவரிடமிருந்து 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளதாகவும் சுங்கத் திணைக்களத்தின் போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்திலேயே அந்த வெளிநாட்டுப் பெண்மணி வருகை தந்துள்ளதாகவும், அவர் தமது பயணப் பொதியில் மறைத்து வைத்து சூசகமாக அந்த போதைப் பொருளை எடுத்து வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போதே இந்த யுவதி கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், பிரதி சுங்கப் பணிப்பாளர் (சட்ட விவகாரங்கள்) சுதத்த சில்வா தெரிவித்தார்.

துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-650 விமானத்தில் இன்று (28) காலை 08.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவரது பயணப் பையை சோதனையிட்டபோதே கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கொக்கேய்ன் கரைசலில் கொக்கேய்ன் போதைப் பொருள் செறிவு அதிகமாக காணப்படுவதாக சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுவரை இவ்வாறு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள கொக்கெய்ன் போதைப் பொருளின் அதிகூடிய தொகை இதுவாகுமென்றும் குறித்த பெண்மணி தமது பயணப் பொதியில் ஆடைகளுக்கு மத்தியில் மறைத்து வைத்து அதனை எடுத்து வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரிடமிருந்து 4 கிலோ மற்றும் 600 கிராம் எடையுடைய கொக்ெகய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி 230 மில்லியனாகுமென்றும் அவர் இந்த போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டுவந்து தருவதற்காக அவருக்கு 500 அமெரிக்கன் டொலர் கிடைக்கவிருந்ததாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த யுவதியிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment