அரசாங்கத்திற்கு எதிராக துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் : கப்பல்களை அனுமதிக்கப் போவதில்லை என எச்சரிக்கை ! - News View

About Us

About Us

Breaking

Monday, January 30, 2023

அரசாங்கத்திற்கு எதிராக துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் : கப்பல்களை அனுமதிக்கப் போவதில்லை என எச்சரிக்கை !

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக கொழும்பு துறைமுக ஊழியர்கள் இன்று (30) திங்கட்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

துறைமுக நுழைவாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு துறைமுகத்தின் பல தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இன்று முற்பகல் சுமார் 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கொழும்பு துறைமுகத்தை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டது.

அரசாங்கம் முன்வைத்துள்ள வரிகளை திருத்தியமைக்காவிட்டால் இன்று முதல் கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment