இலங்கை ரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 500 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளதால் 44 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு ஓய்வு பெற்ற ஊழியர்களில் பெரும்பாலானோர் ரயில்களை இயக்குவதில் நேரடியாக தொடர்புடையவர்களாவர்.
இன்றைய நிலவரப்படி இவற்றில் கரையோரப் பாதையில் 12 ரயில் சேவைகளும், பிரதான பாதையில் 23 ரயில் சேவைகளும், புத்தளம் பாதையில் 7 ரயில் சேவைகளும், களனி வெளிப் பாதையில் 2 ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ரயில்வே அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியை தொடரச் செய்யுமாறு ரயில்வே கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்ட போதிலும் கடந்த 2 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அனுமதிக்கப்படும் வரை ஓய்வு பெற்ற எந்த ஊழியரும் பணிக்கு வரமாட்டார்கள் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment