உணவுப் பண வீக்கம் அதிகமுள்ள முதல் 10 நாடுகளில் இலங்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 27, 2022

உணவுப் பண வீக்கம் அதிகமுள்ள முதல் 10 நாடுகளில் இலங்கை

(எம்.மனோசித்ரா)

உலக வங்கியின் அண்மைய தரப்படுத்தலுக்கமைய அதிக உணவு பண வீக்கம் கொண்ட முதல் 10 நாடுகளில் இலங்கை 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் உணவு பண வீக்கம் 74 சதவீதமாகக் காணப்படுவதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

உணவு பண வீக்கம் அதிகமுள்ள நாடுகளில் சிம்பாபே முதலாவது இடத்திலுள்ளது. இந்நாட்டில் உணவு பண வீக்கம் 321 சதவீதமாகக் காணப்படுகிறது. லெபனான் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ளது. இந்நாட்டில் உணவு பண வீக்கம் 203 சதவீதமாகக் காணப்படுகிறது.

இதேபோன்று வெனிசுலா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டில் உணவு பண வீக்கம் 158 சதவீதமாகக் காணப்படுகிறது.

நான்காவது இடத்தில் துருக்கி காணப்படுகிறது. அங்கு உணவு பண வீக்கம் 102 சதவீதமாகக் காணப்படுகிறது. ஐந்தாம் இடத்தில் ஆஜென்டீனா காணப்படுகிறது. அங்கு உணவு பண வீக்கம் 92 சதவீதமாகக் காணப்படுகிறது.

இதேவேளை, ஆறாவது இடத்தில் ஈரான் காணப்படுகிறது. ஈரானில் உணவு பண வீக்கம் 84 சதவீமாகக் காணப்படுகிறது. 7ஆவது இடத்தில் இலங்கையும், எட்டாவது இடத்தில் ருவாண்டாவும் காணப்படுகின்றன. ருவாண்டாவில் உணவு பண வீக்கம் 65 சதவீதமாகக் காணப்படுகின்றது.

ஒன்பதாவது இடத்தில் சுரினாம் (தென் அமெரிக்க நாடு) காணப்படுகிறது. அந்த நாட்டில் உணவு பண வீக்கம் 51 சதவீதமாகக் காணப்படுகிறது. ஹங்கேரி நாடு 44 சதவீத உணவு பண வீக்கத்துடன் 10ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment