மக்களே அவதானம் ! சலூன்களில் எச்ஐவி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 2, 2022

மக்களே அவதானம் ! சலூன்களில் எச்ஐவி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள்

சிகை அலங்கார (சலூன்) நிலையங்களில் முடியைக் கத்தரிக்கும்போது எச்ஐவி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தோல் நோய் வைத்திய நிபுணர் டாக்டர் ஜானக அகரவிட்ட தெரிவித்துள்ளார்.

இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 'சிகை அலங்கார (சலூன்) நிலையங்களில் முடி வெட்டும்போது அதற்குப் பயன்படுத்தப்படும் பிளேட் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அதாவது ஒருவருக்குப் பயன்படுத்தப்பட்ட பிளேட்டை மற்றொருவருக்குப் பயன்படுத்தக் கூடாது. இதேபோன்றே பச்சை குத்தும்போது பயன்படுத்தப்படும் ஊசிகளும் அவ்வாறே ஆளுக்கு ஆள் மாற்றப்பட்ட வேண்டும்.

எச்ஐவி மற்றும் ஹெபடைடிஸ் B போன்ற நோய்கள் இத்தகைய வழிகளில் பரவுகின்றன. எனவே, இதுபோன்ற சேவைகளை சரியான தரத்துடன் கூடிய இடங்களில் பெற்றுக் கொள்வது முக்கியம்' என்றார்.

No comments:

Post a Comment