அரச ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு ! உடன் ரத்தாகும் இரு சுற்றறிக்கைகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 30, 2022

அரச ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு ! உடன் ரத்தாகும் இரு சுற்றறிக்கைகள்

2019 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ உடை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சு இன்றைய தினம் அறிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்று காலத்தில் அலுவலகங்களுக்குச் செல்லும்போது அரச ஊழியர்கள் வசதியான ஆடைகளை அணிந்து கொள்வதற்கு வாய்ப்பளித்து வெளியிடப்பட்ட இரண்டு சுற்றறிக்கைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே. மாயாதுன்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் காணப்படுகிறது.

அதன்படி, ஜூன் 26, 2019 மற்றும் செப்டம்பர் 27, 2022 ஆகிய திகதிகளில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளே இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment