ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தின் 15 வீதத்தினை ஆடைக்காக செலவிடுகின்றனர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 30, 2022

ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தின் 15 வீதத்தினை ஆடைக்காக செலவிடுகின்றனர்

கல்வியமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப ஆடை அணிவதற்காக ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தின் 15 வீதத்தினை செலவிடுகின்றனர் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜப்பான் பல்கலைகழகத்தின் கலாநிதிப்பட்ட ஆய்விற்காக லசினி ஜெயசூரிய என்பவர் மேற்கொண்ட ஆய்வின்போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை பாடசாலைகளுக்கு அணிவதற்கான ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்துகின்றனர் என ஆய்வின்போது தெரியவந்துள்ளது.

ஆசிரியர்கள் அதிகளவில் சேலைக்கு பணத்தை செலவிடுகின்றனர் எங்கள் ஆய்வின்போது ஆசிரியர்களின் சம்பளத்தில் 15 வீதம் உடைகளுக்கு செலவிடப்படுவது தெரியவந்துள்ளது என ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் சேலை அணிய வேண்டும் என்ற கட்டாயம் காரணமாக அது அவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாங்கள் 15 ஆசிரியர்களிடம் உரையாடினோம் கேள்வி பதில்கள் மூலம் 100 ஆசிரியர்களின் விபரங்களை பெற்றோம், இதன்போது சேலை கற்பித்தல் நடவடிக்கைகளை பாதிக்கின்றது என்பதை கண்டறிந்தோம்.

மேலும் சேலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் நாங்கள் ஆராய்ந்தோம் என தெரிவித்துள்ள ஜெயசூரிய சேலை காரணமாக எங்கள் ஆய்வில் கலந்துகொண்ட ஆசிரியர்களில் 30 வீதமானவர்கள் விபத்துக்களை எதிர்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. புகையிரதங்கள் போன்றவற்றில் பயணிக்கும்போது இவ்வாறான விபத்துக்கள் வழமையான விடயமாக காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் ஆசிரியர்களின் ஆடைகள் தொடர்பான விதிமுறைகள் பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தினை கொண்டுள்ளன, ஆண்களுக்கு மேற்கத்தைய பாணியில் ஆடை அணிவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேசரி

No comments:

Post a Comment