மேல் மாகாணத்தில் வீடுகளில் தங்கியிருப்பவர்கள் தொடர்பில் பொலிஸார் முன்னெடுக்கும் பதிவு தனியே தமிழ், முஸ்லிம் மக்களுக்குரியதல்ல என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் தங்கியிருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் இப்பதிவுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிடடார்.
பொலிஸார் வீடு வீடாக முன்னெடுக்கும் பதிவு குறித்து கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் குற்றச் செயல்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையினால் சாதாரண மக்களுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment