முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்த சுப்ரமணியன் சுவாமி - News View

About Us

About Us

Breaking

Thursday, September 29, 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்த சுப்ரமணியன் சுவாமி

இந்திய அரசியல் பிரமுகரும், பாரதீய ஜனதா கட்சி (BJP) உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று (28) கொழும்பில் வைத்து சந்தித்தார்.

இச்சந்திப்பில் சுப்ரமணியன் சுவாமியுடன் இந்திய சட்டத்தரணிகள் மற்றும் தொழிலதிபர்கள் குழுவும் சென்றிருந்தது.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) ஏற்பாடு செய்துள்ள 15ஆவது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுப்பரமணியன் சுவாமி இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரதீய ஜனதா கட்சி (BJP) உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி நாளையதினம் (30), பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நேற்றிரவு இடம்பெற்ற நவராத்திரி பூஜையில், சுப்ரமணியன் சுவாமி விசேட அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment