நீதிமன்ற உத்தரவுக்கமையவே செயற்பட்டோம், எமது பக்க நியாயத்தை அறிவித்துள்ளோம் : ரஷ்யா உத்தரவிட்டால் விமானத்தை விடுவிக்க நாங்கள் தயார் - நிமல் சிறிபால டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Monday, June 6, 2022

நீதிமன்ற உத்தரவுக்கமையவே செயற்பட்டோம், எமது பக்க நியாயத்தை அறிவித்துள்ளோம் : ரஷ்யா உத்தரவிட்டால் விமானத்தை விடுவிக்க நாங்கள் தயார் - நிமல் சிறிபால டி சில்வா

(எம்.ஆர்.எம்.வசீம்)

ரஷ்யாவின் ஏரோபுலொட் விமானம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கும் அரசாங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீதிமன்ற உத்தரவுக்கமையவே நாங்கள் செயற்பட்டோம். எமது பக்க நியாயத்தை அந்த நாட்டுக்கு அறிவித்துள்ளோம். அதனால் ரஷ்யா இலங்கை இராஜதந்திர உறவுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அத்துடன் வழக்கின் பிரதிவாதயாக பெயரிடப்பட்டிருந்த விமான பயண பிரதான கட்டுப்பாட்டளரை நீதிமன்றம் அதில் இருந்து விலக்களித்துள்ளதால், ரஷ்யா உத்தரவிட்டால் விமானத்தை விடுவிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ரஷ்யாவின் ஏரோபுலொட் விமானம் தொடர்பான உண்மை நிலைமையை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழைமை துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு விளக்கமளிக்ககையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ரஷ்யாவின் ஏரோபுலொட் விமானம் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக சரியான தகவல் தெரியாமல், திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் ஊடகங்கள் ஊடாக பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது. அதனால் இந்த விவகாரம் நாட்டுக்குள் பாரியதொரு சர்ச்சையை ஏற்படுத்தும் அளவுக்கு பேசப்பட்டு வருகின்றது. அதனால் இதன் உண்மைத் தன்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

தனியார் இரண்டு நிறுவனங்களுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் மீறப்பட்டிருப்பது தொடர்பாக கொழும்பு வனிக உயர் நீதிமன்றத்தில் அயர்லாந்து நிறுவனமான செலஸ்டர் எயார்லைன்ஸ் ட்ரேடிங் லிமிடெட், வழக்கொன்று தொடுத்திருந்தது.

அதன் முதலாவது பிரதிவாதியாக ரஷ்யாவின் மொஸ்கோ ஏராேபுலொட் விமான சேவையும் இரண்டாவது பிரதிவாதியாக எமது விமான நிலையத்தின் விமான பயண பிரதான கட்டுப்பாட்டளர் பெயரிடப்பட்டுள்ளார். அதனால் இந்த வழக்கு அரசாங்கத்துக்கு எதிரான வழக்கு அல்ல. மாறாக இரண்டு நிறுவனங்களுக்கடையிலான வர்த்தக ஒப்பந்தம் மீறப்பட்டிருப்பது தொடர்பான வழக்காகும்.

அந்த வழக்கை தொடுத்துள்ள செலஸ்டர் எயார்லைன்ஸ் ட்ரேடிங் லிமிடெட் நிறுவனம் தனது முறைப்பாட்டில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரை இறக்கட்டிருக்கும் விமானம் தங்களின் விமானம் எனவும் அதனை குத்தகை அடிப்படையில் ஏராேபுலொட் விமான சேவைக்கு வழங்கி இருப்பதாகவும் என்றாலும் வருடாந்த குத்தகை பணத்தை ஏராேபுலொட் விமான சேவை முறையாக செலுத்த தவறி இருக்கின்றது. அதனால் இந்த விமானத்தை தடுத்து நிறுத்தி, அந்த பணத்தை பெற்றுத்தருமாறு எமது சிவில் உயர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

அதன் பிரகாரம் கடந்த 2ஆம் திகதி முறைப்பாட்டாளரின் கோரிக்கையை ஆராய்ந்த நீதிபதி, இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பரப்பதற்கு இடைக்கால தடை உத்தரவு பிரப்பித்திருந்தார்.

அந்த இடைக்கால தடையின் முதலாவது உத்தரவை, இந்த விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியில் கொண்டு செல்லக்கூடாது என ஏரோபுலொட் விமான சேவைக்கு பிரப்பித்திருக்கின்றது. அத்துடன் எமது விமான நிலையத்தின் விமான பயண பிரதான கட்டுப்பாட்டாளருக்கு இந்த உத்தரவை தொலைபேசியில் அறிவுறுத்துமாறும் நீதிபதி, பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன் பிரகாரம் பதிவாளர் நீதிமன்ற உத்தரவை விமான கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்திருந்தார். அதேபோன்று சில சட்டத்தரணிகளும் விமான நிலைய கட்டுப்பாட்டு பிரிவுக்கு வந்து நீதிமன்ற உத்தரவை கையளித்து சென்றிருக்கின்றனர்.

என்றாலும் வழக்கின் பிரதிவாதியாக விமான கட்டுப்பாட்டாளர் பெயரிடப்பட்டிருப்பது தொடர்பாக மறுநாள் 3ஆம் திகதி, நீதிமன்றத்தில் எமது சட்டத்தரணிகள் விளக்கம் கோரி இருந்தது. ஏனெனில் விமானம் ஒன்றை பரக்கவிடுவதற்கும் அதனை நிறுத்தவதற்கு அதிகாரம் இருப்பது சிவில் விமான சேவை பணிப்பாளருக்காகும் என நீதிமன்றத்துக்கு தெரிவித்தது.

அதன் பின்னர் நீதிமன்றம், நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு இரண்டாம் பிரதிவாதிக்கு செல்லுபடியாகாது என உத்தரவிட்டது. அதனால் இந்த வழக்கில் இருந்து தற்போது நாங்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றோம். அந்த விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அனுப்புவதற்கு அனுமதியளிக்க எங்களுக்கு முடியும்.

எனவே இது தொடர்பாக சிவில் விமான சேவை பணிப்பாளர் நாயகம் ஏரோபுலொட் விமான சேவைக்கு அறிவித்து, நீங்கள் கோரினால் விமானத்தை நாங்கள் அனுப்புவதற்கு தயார் என தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவுக்கான தூதுவருக்கும் இதனை அறிவித்திருக்கின்றோம்.

ஆனால் அவர்கள் இது தொடர்பாக இதுவரை எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. அவர்கள் இவ்வாறு கோராமல் இருப்பது, அவர்களுக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு இருக்கின்றது. அவர்கள் அதனை மீறி விமானத்தை அனுப்புமாறு கேட்டுக் கொண்டால், நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு ஆளாக வேண்டி வரும் என்ற காரணத்தினால், அவர்கள் அதனை செயய்யாமல் இருக்கின்றார்கள் என்றே நாங்கள் நினைக்கின்றோம்.

எனவே ஏரோபுலொட் விமானம் தடுத்து வைத்திருப்பது தொடர்பாக எமது பக்கத்தால் எந்த தவறும் இடம்பெறவில்லை. நாங்கள் சட்டத்தின் பிரகாரமே செயற்பட்டிருக்கின்றோம். இந்த சம்பவம் காரணமாக ரஷ்யாவின் எமது நாட்டுக்கான சுற்றுலா பயணிகளின் வருகை, அந்த நாட்டில் இருந்து வரும் ஏனைய விமானங்களுக்கான தடை போன்ற விடயங்கள் ஏற்பட்டன. அதனால் அரசாங்கம் என்ற வகையில் இதனை இணக்கமாக முடித்துக் கொள்ளவே முயற்சிக்கின்றோம்.

அதனால் நீதிமன்ற உத்தரவினால் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாகவும் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இன்று சட்டமா அதிபர் நீதிமன்றத்துக்கு விளக்கமளித்து, சட்ட ரீதியாகவே இதனை இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்க இருக்கின்றார் என்றார்.

No comments:

Post a Comment