இலங்கையில் மூன்று இடங்கள் புனித பூமிகளாக வர்த்தமானியிடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 14, 2022

இலங்கையில் மூன்று இடங்கள் புனித பூமிகளாக வர்த்தமானியிடப்பட்டது

முனீரா அபூபக்கர் 

புதிதாக மூன்று இடங்கள் புனித பூமிகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணுதுங்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை, பொத்துவில் முஹது மகா விகாரை, ஹனுபிட்டிய கங்காராம விகாரை மற்றும் குரகல ரஜா மகா விகாரை ஆகிய மூன்று இடங்களும் அவ்வாறு புனித பூமிகளாக அறிவிக்கப்பட்டுள்ள புனித பூமிகளாகும்.

அதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் நகர வீடமைப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணுதுங்கவினால் கையொப்பமிடப்பட்டுள்ளது.

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் மூலம் அந்த மூன்று இடங்களும் புனித பூமிகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த நாட்டில் புனித பூமிகளாக 78 இடங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. 1961 ஒக்டோபர் 16 அன்று கதிர்காமம் இந்த நாட்டின் முதலாவது புனித பூமியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு 3 மாதங்களுக்கு முன்பு நாகதீப ரஜ மகா விகாரை 78 ஆவது புனித பூமியாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இப் புனித இடங்கள், தேசிய, பிராந்திய மற்றும் பிரதேச வாரியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இவ்வாறாக தெரிவு செய்யப்படுகின்றன.

தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் புத்தசாசன அமைச்சின் அங்கீகாரத்துடன் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டன.

அனுராதபுரம் கதிர்காமம், பொலன்னறுவை ஆகிய 12 சொலஸ்மஸ்தான ரஜ மகா விகாரை, மடு தேவாலயம், முஹது மகா விகாரை, அம்பாறை தீகவாபி, திருகோணமலை கிரிகடு சேய, மாத்தறை கொலவெனிகம ரஜமகா விகாரை, பிங்கிரிய தேவி கிரி ரஜமகா விகாரை, சேருவில ரஜமகா விகாரை, அலு விகாரை மாத்தளை உள்ளிட்ட புனித பூமிகள் பலவற்றின் அபிவிருத்திகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment