திங்கள் முதல் தனியார் பேருந்து சேவை மட்டுப்படுத்தப்படும் : எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை இல்லை - News View

About Us

About Us

Breaking

Sunday, June 5, 2022

திங்கள் முதல் தனியார் பேருந்து சேவை மட்டுப்படுத்தப்படும் : எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை இல்லை

(இராஜதுரை ஹஷான்)

அடுத்த டீசல் கப்பல் நாட்டை வந்தடையும் வரை நாளை முதல் தனியார் பேருந்து சேவை மட்டுப்படுத்தப்படும். எரிபொருள் விநியோகத்தில் தனியார் பேருந்து சேவைக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் விநியோகத்தில் அரச பேருந்து சேவைக்கு முன்னுரிமை வழங்குவதைப் போன்று தனியார் பேருந்துகளுக்கும் முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம். இருப்பினும் இதுவரை சாதகமான தீர்வு கிடைக்கப் பெறவில்லை. கல்வி பொதுத் தராதர சாதரண தரப் பரீட்சையினை கருத்திற் கொண்டு கடந்த நாட்களில் சேவையில் ஈடுபட்டோம்.

ஒரு பயணத்திற்கு தேவையான டீசலை பெற்றுக் கொள்வது கூட தற்போது பெரும் போராட்டமாக உள்ளது. எரிபொருள் வரிசையில் நிற்பதா அல்லது போக்குவத்து நடவடிக்கையில் ஈடுபடுவதா என்ற பிரச்சினையை பேருந்து உரிமையாளர்கள் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள்.

அடுத்த டீசல் கப்பல் நாட்டுக்கு வரும் வரை நாளை முதல் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்படும். தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சேவையாளர்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பேருந்து கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ள போதும் அது தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தீர்வாக அமையாது. வாகனங்களின் உதிரிப்பாகங்களின் விலையேற்றத்திற்கமைய பேருந்து கட்டணம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என பேரூந்து உரிமையாளர்கள வலியுறுத்தியுள்ளார்கள் என்றார்.

No comments:

Post a Comment