பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நிந்தித்த குற்றச்சாட்டின் கீழ் தேடப்படும் நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் தான் தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ளதாக தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் உவிந்து வெத்தாராச்சியை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நிந்தித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்வதற்காக பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அவர் தனது முகநூல் பதிவில் இலங்கை பொலிஸாரே நான் படகு மூலம் சற்றுமுன்னர் மெல்பேர்ன் வந்து சேர்ந்தேன். தற்போது என்ன செய்வது என பதிவிட்டுள்ளார்.
தெற்கு நெடுஞ்சாலையில் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு, தற்போது பொலிஸாரால் தேடப்படும் ஒருவரான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் புதல்வரே இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
No comments:
Post a Comment