(எம்.மனோசித்ரா)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் உதவியை நாடுவதாக தெரிவித்துள்ள நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ , உத்தேச 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அந்நாட்டு தூதுவருக்கு விளக்கமளித்துள்ளார்.
நீதி மற்றும் அசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்லர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் மற்றும் உத்தேச 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும், அரசியல் ஸ்திரத்தன்மையுடன் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பிலும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ , தூதுவருக்கு விளக்கமளித்தார்.
இலங்கையும் சுவிட்சர்லாந்தும் வலுவான பொருளாதார மற்றும் அரசியல் நட்புறவின் நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் உதவியை நாடுவதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள் குறித்து தாம் கரிசனை கொள்வதாகவும், அவற்றை முறியடிக்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதாகவும் தூதுவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment