கடல் வழியாக சட்டவிரோதமாக குடியேறிய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் நேற்று மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.
20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். நீர்கொழும்பு வாசிகளான இவர்கள் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
19 நாட்களுக்கு முன்னர் தமது பயணத்தை ஆரம்பித்த இக்குழுவினர், பல நாட்கள் இழுவைப் படகில் பயணித்த போது அவுஸ்திரேலிய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அவர்கள் அவுஸ்திரேலிய விமானப் படையின் விசேட விமானத்தில், அவுஸ்திரேலியப் படைகளின் அதிகாரிகளின் ஒரு பாரிய குழுவுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்தக் குழு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஒப்படைத்தது.
பின்னர் விமான நிலையத்திலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 15 பேரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், அவர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
No comments:
Post a Comment