ஜூன் 13 ஆம் திகதி குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகங்கள் திறக்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 11, 2022

ஜூன் 13 ஆம் திகதி குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகங்கள் திறக்கப்படும்

(எம்.வை.எம்.சியாம்)

அரசாங்க அலுவலகங்களுக்கு நாளை மறுதினம் தினம் (13) விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய பிராந்திய அலுவலகங்கள் வழமை போன்று நாளை மறுதினம் தினம் திங்கட்கிழமை திறந்திருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது,

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் இது தொடர்பில் கருத்து கூறுகையில், பொது நிர்வாக அமைச்சினால் திங்கட்கிழமை (ஜூன் 13) விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் அரசாங்க அலுவல்கங்களை இயக்குவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் விசேட விடுமுறையாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் அத்தியாவசிய சேவையாக கருதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்கள் 13 ஆம் திகதி நாளை மறுதினம் திறந்திருக்கும் என்றும் அதன் மூலம் பயனர்கள் சேவைகளை பெற்று கொள்ள முடியும் என்றும் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment