11 சிறுவர்கள் போஷாக்கு குறைபாட்டால் பாதிப்பு : கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை - News View

About Us

About Us

Breaking

Monday, June 6, 2022

11 சிறுவர்கள் போஷாக்கு குறைபாட்டால் பாதிப்பு : கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை

(எம்.எம். சில்வெஸ்டர்)

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையிலுள்ள சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனையின்போது 11 சிறுவர்கள் போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு தேவையான போதியளவு ஊட்டச்சத்து இல்லாதமையே இதற்கு முக்கிய காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் மருத்துவமனையில் 53 குழந்தைகளை பரிசோதித்தோம், அவர்களில் பாதி பேர் ஆபத்தான நிலையில் இருந்தனர். கடந்த காலத்தில் நாங்கள் மேற்கொண்டிருந்த சில அவதானிப்புகளின் காரணமாக நாங்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு விரும்பினோம்.

இங்கு நம் குழந்தைகளுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளான கார்போஹைட்ரேட், புரதச் சத்து, கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் இல்லாததாகும். இவை குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.

குழந்தைகளின் உணவு வேளைகளின்போது ச்சீஸ், பட்டர் போன்றவற்றை விடவும் பால், முட்டை, அரிசி மற்றும் முருங்கைக்காய் போன்றன கொடுப்பதுடன், பச்சை இலைக் காய்கறிகளையும் சேர்க்க வேண்டும். மேலும் குழந்தைக்கு மஞ்சள் காய்கறிகளையும் கொடுங்கள்.

மரவள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு, சீனிக் கிழங்கு போன்றவற்றையும் குழந்தைகளுக்கு கொடுங்கள். சீனிக் கிழங்குகளில் அதிகளவான சத்துக்கள் உள்ளன. மேலும் குழந்தைகளுக்கு சோளம், வாழைப்பழம், பப்பாளி, நாமினாங்கு போன்றவற்றையும் ‍கொடுப்பது நல்லது.

No comments:

Post a Comment