ரணிலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு தினேஷ் சபாநாயகரிடம் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 7, 2022

ரணிலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு தினேஷ் சபாநாயகரிடம் வேண்டுகோள்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு வழங்க தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்தார்.

தனது வீட்டை சுற்றி வளைக்கும் திட்டம் இருப்பதாகவும், அப்படியானால், உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தமக்கான பாதுகாப்பை வழங்க தலையிடுமாறும் ரணில் விக்ரமசிங்க கோரியதாக அவர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே, சபையில் கூறப்படும் அறிக்கைகள் தொடர்பாக எந்தவொரு அரசியல் கட்சியும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் மிரட்டுவது ஜனநாயக நடைமுறையல்ல என்றும் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பின்போது அரசாங்கத்தின் பக்கம் நின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் தமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

கொழும்பு 5 இல் உள்ள அவரது வீட்டை சுற்றி வளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ‘எதிர்ப்புகளுக்கு நான் பயப்படவில்லை, ஆனால் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது நாடு இன்று எதிர்கொள்ளும் நெருக்கடி’ என்று அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment