(எம்.ஆர்.எம்.வசீம்)
பிரதமர் பதவி விலகி இடைக்கால அரசாங்கத்துக்கு இடமளிக்க வேண்டும் எனும் பிரதான கோரிக்கையுடன் இடதுசாரி கட்சிகளின் மே தினக் கூட்டம் இன்று கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெற்றது.
இடதுசாரி கட்சிகளின் கூட்டணியான இலங்கை கம்யூனிஸ் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, மக்கள் கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து இன்று மே தினத்தை கொண்டாடின.
மே தின பிரதான நிகழ்வாக பிற்பகல் 2 மணியளவில் கொழும்பு கொம்பனி தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. அங்கிருந்து ஊர்வலமாக வந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் நகர பண்டபம், டாலி வீதி ஊடாக கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தை மாலை 3 மணியளவில் வந்தடைந்தனர்.
கொம்பனி வீதியில் இருந்து ஊர்வலமாக வந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறு வாசங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை காட்சிப்படுத்திக் கொண்டும் பதாதைகளை ஏந்திய வண்ணமும் போராட்டக் கோஷங்களை எழுப்பிக் கொண்டு வந்ததை காணமுடியுமாக இருந்தது.
குறிப்பாக மக்களின் கோரிக்கைக்கு செவசாய்த்து அரசாங்கம் பதவி விலக வேண்டும். பிரதமர் பதவி விலகி இடைக்கால அரசாங்கத்துக்கு இடமளிக்க வேண்டும். பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் இல்லாவிட்டால் முடியுமானவர்களுக்கு அரசாங்கத்தை ஒப்படைக்க வேண்டும். அரசாங்கமே தொடர்ந்தும் மக்கள் மீது சுமைகளை சுமத்தாதே போன்ற கோஷங்களை எழுப்பிக்கொண்டு சென்றனர்.
அத்துடன் இடதுசாரி கட்சிகளின் இம்முறை மே தினக் கூட்டத்தின் பிரதான கோரிக்கையாக இருந்தது, நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண தற்போதைய அரசாங்கத்துக்கு முடியாது. அதனால் பிரதமர் பதவி விலகி இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு கண முடியுமான நிலை ஏற்பட்ட பின்னர் ஒரு வருடத்துக்குள் தேர்தலுக்கு செல்லவேண்டும் என்பதாகும்
3 மணி அளவில் ஹைட்பார்க் மைதானத்தை வந்தடைந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் கொம்பனி வீதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்லத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இவர்கள் மாலை 3 மணியளவில் பிரதான மேடை அமைக்கப்பட்டிருந்த கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தை வந்ததடைந்தனர்.
பிரதான மேடையில் கட்சித் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, வீரசுமன வீரசிங்க, அசங்க நவரத்ன ஆகியோர் மற்றும் தொழிற்சங்க தலைவர்களும் இதன்போது உரையாற்றினர். நிகழ்வுகள் அனைத்தும் மாலை 4 மணியளவில் நிறைவடைந்தன.
No comments:
Post a Comment