மக்கள் போராட்டத்தை இடைக்கால அரசாங்கத்தின் மோசடிகளுக்காக காட்டிக் கொடுக்க முடியாது - சஜித் பிரேமதாஸ - News View

About Us

About Us

Breaking

Sunday, May 1, 2022

மக்கள் போராட்டத்தை இடைக்கால அரசாங்கத்தின் மோசடிகளுக்காக காட்டிக் கொடுக்க முடியாது - சஜித் பிரேமதாஸ

மக்கள் போராட்டத்தை, இடைக்கால அரசாங்கத்தின் மோசடிகளுக்காக காட்டிக் கொடுக்க முடியாது என முன்னாள்ள ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் நினைவேந்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மோசடி, இலஞ்சம், ஊழல் நிர்வாகத்திலிருந்து விடுவிப்பதற்காகக் கொண்டுவரப்படும் மோசடியான தந்திரோபாயமே இடைக்கால அரசாங்கமாகும் எனவும் சஜித் தெரிவித்தார்.

இதனூடாக, இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக நாட்டை மேலும் சீர்குலைக்கும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான மோசடியான அரசாங்கத்துடன் இணைவதை விட பதவிகளை இராஜினாமா செய்வதே தனக்கு மகிழ்ச்சியானது எனவும் தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களின் புனிதமான போராட்டத்தை மோசடியான முறையில் காட்டிக்கொடுக்க மாட்டோம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் உருவச்சிலைக்கு முன்னால் இருந்து இந்த உறுதியை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 29 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (01) புதுக்கடையில் உள்ள ரணசிங்க பிரேமதாச உருவச்சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.

No comments:

Post a Comment