இலங்கைக்கு, தாய்லாந்திலிருந்து சமையல் எரிவாயு : ஓமான் அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் நிறைவு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 1, 2022

இலங்கைக்கு, தாய்லாந்திலிருந்து சமையல் எரிவாயு : ஓமான் அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் நிறைவு

(எம்.எப்.எம்.பஸீர்)

நாட்டின் நுகர்வோருக்கு குறைந்த விலையில் சமையல் எரிவாயுவினைப் பெற்றுக் கொடுக்க புதிய விநியோகஸ்தர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தகவல்கள் தெரிவித்தன.

தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனமே இவ்வாறு புதிய விநியோகஸ்தராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.

கடந்த இரு ஆண்டுகளில் லிட்ரோ நிறுவனம் இறக்குமதி செய்த எரிவாயு விலையுடன் ஒப்பீடு செய்யும் போது, தாய்லாந்தின் சியாம் நிறுவனத்திடமிருந்து குறைந்த விலையில் எரிவாயுவை பெற முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவிக்கிறது.

கடந்த இரு வருடங்களாக ஓமான் நிறுவனம் ஒன்றிடமிருந்தே சமையல் எரிவாயு பெறப்பட்டதுடன், அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது.

அந்நிறுவனத்திடம் இருந்து பெறும் இறுதி எரிவாயு தொகையை தாங்கிய கப்பல், கடந்த 29 ஆம் திகதி 35 ஆயிரம் மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் நாட்டை வந்தடைந்திருந்தது.

இந்நிலையிலேயே புதிய விநியோகஸ்தரை அடுத்த இரு வருடங்களுக்கு தெரிவு செய்வதற்கான விலை மனு கோரல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அதன் போதே தாய்லாந்து நிறுவனத்திடமிருந்து குறைந்த விலையில் எரிவாயுவை பெற முடியும் என்பது அவதானிக்கப்ப்ட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்தது.

No comments:

Post a Comment