'கோட்டா கோ கம', 'மைனா கோ கம' போராட்டங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் CID யினால் கைது செய்யப்பட்ட மொரட்டுவை மேயர் சமன் லால் பெனாண்டோ, டான் பிரியசாத் உள்ளிட்ட 8 பேருக்கு மே 25 வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவங்கள் தொடர்பில் நேற்றையதினம் (18) CID யினால் கைது செய்யப்பட்ட, மொரட்டுவை மேயர் சமன் லால் பெனாண்டோ, களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன, சீதாவாக்கை பிரதேச சபைத் தலைவர் ஜயந்த ரோஹண, சீதாவாக்கை பிரதேச சபை உறுப்பினர்களான பந்துல ஜயமான்ன, தினெத் கீதிக, கரந்தெனிய பிரதேச சபை உறுப்பினர் சமீர சத்துரங்க, டான் பிரியசாத் உள்ளிட்ட 8 பேருக்கே இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இன்றையதினம் (19) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதவான் இவ்வாறு விளக்கமறியல் உத்தரவை விடுத்துள்ளார்.
இச்சம்பவங்கள் தொடர்பில் CID யினால் கைது செய்யப்பட்ட SLPP எம்.பிக்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக ஆகியோருக்கும் நேற்றையதினம் (18) மே 25 வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டுள்ள விசாரணைகளுக்கமைய குறித்த நபர்களை அடையாளம் காண உதவுமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
தொலைபேசி இலக்கங்கள்
071-8594901
071-8594915
071-8592087
071-8594942
071-2320145
011-2422176
No comments:
Post a Comment