எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் பாராளுமன்றம் ஒத்திவைப்பு ! - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 5, 2022

எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் பாராளுமன்றம் ஒத்திவைப்பு !

எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளுக்கு மத்தியிலும் இன்றைய பாராளுமன்ற அமர்வு முன்கூட்டியே நிறைவுக்கு வந்துள்ளது.

அவைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அறிவிப்பை அடுத்து பாராளுமன்றம் நாளை (6) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை நாளை வரை ஒத்தி வைக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக அவைத்தலைவர் பிரேம்நாத் சி டோலவத்த அறிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்றத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளதுடன், பாராளுமன்ற வீதி மக்கள் பிரவேசிக்க முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment