கொஸ்டாரிகா ஜனாதிபதி தேர்தலில் பொருளியலாளரான ரொட்ரிகோ சாவேஸ் வெற்றி பெற்றிருப்பதாக ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன.
இந்த மத்திய அமெரிக்க நாட்டில் சம்பிரதாய கட்சி அரசியலில் அதிர்வை ஏற்படுத்துவதாக 60 வயதான சாவேஸின் அரசியல் பிரவேசம் பார்க்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஜோஸ் மரியா பிகெரெஸை விடவும் அவர் ஐந்து வீத வாக்குகளால் முன்னிலை பெற்றுள்ளார்.
கொஸ்டாரிகாவில் மோசமடைந்துள்ள பொருளாதாரம் தொடர்பில் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கும் சூழலில், கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு வாக்குப் பதிவு குறைந்து காணப்பட்டது.
வெற்றி பெற்றிருக்கும் சாவேஸ் அரசியலுக்கு முழுமையாக புதிதானவர் அல்ல. அவர் வெளியேறும் அரசில் ஆறு மாதங்கள் பொருளாதார அமைச்சராக செயற்பட்டவராவார்.
கொஸ்டாரிகாவில் மக்கள் தொகையில் 23 வீதத்தினர் வறுமையில் வாழ்கின்றனர்.
No comments:
Post a Comment