சென்னை விமான நிலையத்தில் கைதான அறுவர் புலிகளுக்கு நிதி திரட்டியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 30, 2022

சென்னை விமான நிலையத்தில் கைதான அறுவர் புலிகளுக்கு நிதி திரட்டியதாக குற்றப்பத்திரிகை தாக்கல்

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக நிதி திரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட 06 பேர் மீது, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

போலிக் கடவுச்சீட்டு வைத்திருந்த இலங்கையைச் சேர்ந்த லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவரைக் கைது செய்தனர். 

இதையடுத்து, இவருக்கு உடந்தையாக இருந்த இலங்கையைச் சேர்ந்த கென்னிஸ்டன் பெர்னாண்டோ, தர்மேந்திரன், ஜான்சன் சாமுவேல் மற்றும் சென்னையைச் சேர்ந்த மோகன் ஆகியோர் தமிழக கியூ பிரிவு பொலிஸால் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட இலங்கை பெண் விடுதலை புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக நிதி திரட்டி பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் அனுப்பி வந்ததும், கடந்த 2018 இல், போலி கடவுச்சீட்டு மூலமாக சென்னைக்கு வந்து அண்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கியும் உள்ளார்.

பின்னர், சட்டவிரோதமாக இந்திய கடவுச்சீட்டைப் பெற்றமையும் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment