உலகப் புகழ் பெற்ற சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் காலமானார் - News View

About Us

About Us

Breaking

Friday, March 4, 2022

உலகப் புகழ் பெற்ற சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் காலமானார்

உலகப் புகழ் பெற்ற சுழற்பந்து ஜாம்பவானான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வோர்ன் (52) காலமானார்.

Shane Keith Warne யின் மரணத்திற்கு மாரடைப்பு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

கிரிக்கெட்டின் ஆல் டைம் ஜாம்பவான்களில் ஒருவரான ஷேன் வோர்ன் தனது 52ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார். அவரது பிறந்ததினம் 1969 செப்டெம்பர் 13.

இங்கிலாந்து ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க ஆர்வமாக உள்ளதாக ஷேன் வார்ன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1992 மற்றும் 2007 க்கு இடையில் விஸ்டனின் ஐந்து துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்ட வோர்ன், ஆஸ்திரேலியாவுக்காக 15 வருடங்கள் விளையாடி 708 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றினார், மேலும் 1999 இல் உலகக் கோப்பையை வென்றவர்.

வோர்னின் நிர்வாகத்தால் Fox News செய்திச் சேவைக்கு வழங்கப்பட்ட சுருக்கமான அறிக்கையின்படி, அவர் தாய்லாந்தில் மாரடைப்பால் காலமானதாக சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஷேன் வோர்ன் அவரது வில்லாவில் பேச்சுமூச்சின்றி காணப்பட்டார், மருத்துவ ஊழியர்களின் கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவரை மீண்டும் உயிர்ப்பிக்க முடியவில்லை" என்று பதிலளிக்கப்பட்டது.

"இவ்வேளையில் குடும்பம் தனிமையை விரும்புகிறது, மேலதிக விபரங்களை உரிய நேரத்தில் வழங்குவோம்." என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் மற்றொரு அடையாளமான முன்னாள் விக்கெட் கீப்பர் Rod Marsh இந்த வார ஆரம்பத்தில் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தனது 74ஆவது வயதில் இறந்த நிலையில், ஒரு சில மணித்தியாலங்ளுக்குப் பின்ன இந்த அதிர்ச்சியான செய்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1990 களின் முற்பகுதியில் லெக்ஸ்பின் கலையை தனிமனிதனாக தனித்துவத்துடன் பெற்ற ஒரு மனிதர், "வோர்னி" (Warney), கிரிக்கெட் உலகம் முழுவதும் அறியப்பட்டவர், உலக கிரிக்கெட்டின் உண்மையான இலட்சினைகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.

பாகிஸ்தானின் அப்துல் காதர் போன்ற பிரபலங்கள் இந்த கலையை உயிர்ப்புடன் வைத்திருந்தாலும், வோர்ன் ஒரு புதிய கவர்ச்சியையும் புது வித தந்திரோபாயத்தை லெக்ஸ்பினுக்கு கொண்டு வந்தார்.

1991-92ல் இந்தியாவுக்கு எதிரான ஒரு மோசமான அறிமுகமாக ஒரு விக்கெட்டுக்கு 150 ஓட்டங்கள் பெறுதிக்கு பின்னர், வோர்ன் தனது ஐந்தாவது தோற்றத்தில், இலங்கைக்கு எதிராக போட்டியில் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்தினார். 1992-93 பாக்சிங் டே டெஸ்டில் தனது சொந்த மைதானமான மெல்பேர்னில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஏழு மெட்ச்-வின்னிங் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

145 டெஸ்ட் போட்டிகளில், 273 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், 40,705 பந்துகளை வீசி, 708 விக்கெட்டுகளை வீழத்தியுள்ளார்.

194 ஒரு நாள் போட்டிகளில் 191 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், 10,642 பந்துகளை வீசி, 293 விக்கெட்டுகளை வீழத்தியுள்ளார்.

No comments:

Post a Comment