அவுஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசனுக்கு (வயது 53) கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதையொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளன. அடுத்த வாரம் குணம் அடைவேன். நான் பிரதமராக தொடர்வேன்” என கூறி உள்ளார்.
இவர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுள்ளார். மேலும் 2 கூடுதல் டோஸ்களையும் செலுத்தி உள்ளார். இந்த நிலையில்தான் கொரோனா தொற்று பாதிப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது அவர் சிட்னியில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
பிரதமர் ஸ்காட் மோரீசனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மூத்த அமைச்சர் பென் மார்ட்டனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவரும் தன்னை கான்பெர்ராவில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment