13 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதம் : நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 3, 2022

13 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதம் : நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 13 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இன்று (03) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் - முன்னர் வகித்த பதவி
1. ஏ.ஜி. அலுத்கே - மாவட்ட நீதிபதி
2. ஆர்.ஆர்.ஜே.யூ.ரி.கே. ராஜகருணா - மாவட்ட நீதிபதி
3. ஆர்.ஏ.டி.யூ.என். ரணதுங்க - நீதவான்
4. ரி.எம்.சி.எஸ். குணசேகர - மாவட்ட நீதிபதி
5. எம். பிரபாத் ரணசிங்க - மாவட்ட நீதிபதி
6. ஆர்.எம்.எஸ்.பி. சந்திரசிறி - பிரதான நீதவான்
7. ஆர். வெலிவத்தை - மாவட்ட நீதிபதி
8. ஜீ.எல். பிரியந்த - நீதவான்
9. ஏ. நிஷாந்த பீரிஸ் - மாவட்ட நீதிபதி
10. எஸ்.எம்.ஏ.எஸ் மஞ்சநாயக்க - மாவட்ட நீதிபதி
11. எல். சமத் மதநாயக்க - மாவட்ட நீதிபதி
12. வி.எம். வீரசூரிய - சிரேஷ்ட அரச சட்டத்தரணி
13. எச்.ஏ.டி.என். ஹேவாவாசம் - சிரேஷ்ட அரச சட்டத்தரணி

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் பணி மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கவும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், வழக்கு விசாரணைகளில் தாமதம் ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment