ரஷ்ய ஜனதிபதி விளாடிமிர் புடினின் உத்தரவின்படி உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன.
ரஷ்ய ஜனதிபதி விளாடிமிர் புடின், உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையில் எவர் தலையிட்டாலும் பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அரசாங்கத்தின் முக்கிய இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால், இந்த விவகாரம் சர்வதேச அளவில் அனைவராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.
உலக வரைப்படத்தில் ஐரோப்பாவுக்கும் ரஷ்யாவுக்கும் மத்தியில் அமைந்திருக்கிறது உக்ரைன்.
ரஷ்யாவுடன் நீண்ட எல்லையை பகிர்ந்திருக்கும் உக்ரைனின் டொனட்ஸ்க் (Donetsk), லூஹான்ஸ்க் ( Luhansk) பகுதிகளில் ஏற்கனவே ரஷ்ய ஆதரவுப் பெற்ற கிளர்ச்சியாளர்கள் கடந்த 8 ஆண்டுகளாக உக்ரைன் படையுடன் சண்டையிட்டு வந்தனர்.
2014 ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றிய கிரிமியாவிலும், உக்ரைனுடன் எல்லையை பகிரும் மால்டோவா மற்றும் பெலாரஸ் நாடுகளிலும் சிறிதும், பெரிதுமாக ஏற்கனவே ரஷ்ய படைகள் நிலை கொண்டிருந்தது.
மறுபுறம் ரஷ்யா எல்லையையொட்டிய எஸ்டோனியா, லாத்வியா, லித்துவேனியாவில் நேட்டோ படைகள் உள்ளன.
பிரான்ஸ் மற்றும் சில நாடுகளை தவிர்த்து ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, ஜெர்மனி, நோர்வே, போலந்து, செக் குடியரசு, ருமேனியா, பல்கேரியா, துருக்கி உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகளிலும் நேட்டோ படைகள் உள்ளன.
இராணுவம் பலத்தை பொறுத்த வரையில் ஒப்பீட்டளவில் ரஷ்யாவே பல மடங்கு இராணுவ பலத்தை கொண்டிருக்கிறது.
ரஷ்ய படை வீரர்களின் எண்ணிக்கை 29 இலட்சமாக இருக்கும் நிலையில், உக்ரைன் படை வீரர்களின் எண்ணிக்கை 11 இலட்சமாக இருக்கிறது.
பெலாரசுக்கும் விமானப்படை விமானங்களை அனுப்பியிருக்கும் ரஷ்யா, உக்ரைனை சுற்றிலும் படையை நிறுத்தி தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், உலகளாவிய ஆயுத வர்த்தகத்தைக் கண்காணிக்கும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (International Peace Research Institute -SIPRI) இரண்டு நாடுகளின் ஆயுத பலம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஒப்பீட்டளவில் உக்ரைனை விட ரஷ்யா மூன்று மடங்கு ஆயுத பலம் உடையதாக அறியமுடிகிறது.
ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை ரஷ்யாதான் உலகின் முன்னணியில் உள்ளது.
2020 இல் ரஷ்யா 61.7 பில்லியின் அமெரிக்க டொலர்களை இராணுவத்துக்குச் செலவழித்துள்ளது. அதே நேரம் உக்ரைன் 5.9 பில்லியின் அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளது.
மேலும், உலகின் 140 நாடுகளின் இராணுவத் திறன்களை ஆய்வு செய்யும் Global Fire Power எனும் அமைப்பின் கருத்துப்படி ரஷ்யா இராணுவ ரீதியாக 2 ஆம் இடத்திலும், உக்ரைன் 22 ஆம் இடத்திலும் உள்ளது.
ரஷ்யப்படை பலம்
ரஷ்யாவின் படையில் 8,50,000 இராணுவ வீரர்கள் இருக்கிறார்கள்.
4,100 க்கும் மேற்பட்ட விமானங்கள் இருக்கின்றன.
அதில், 772 போர் விமானங்கள் உள்ளன.
அதே போல தரைப்படைகளைப் பொறுத்தவரை 12,500 டாங்கிகள்.
30,000 க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள்.
14,000 பீரங்கி துப்பாக்கிகள் ஆகியவற்றை ரஷ்யா வைத்துள்ளது.
கடற்படையைப் பொறுத்தவரை ஒரு விமானம் தாங்கி கப்பல் உட்பட 600 க்கும் மேற்பட்ட கடற்படை கப்பல்கள், 70 நீர் மூழ்கிக் கப்பல்கள் ரஷ்யாவின் இராணுவப்படையில் உள்ளன.
உக்ரைன் படைபலம்
உக்ரைன் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 2,50,000.
இராணுவ விமானத்தைப் பொறுத்தவரை 318 விமானங்கள் இருக்கின்றன.
அதில், 69 போர் விமானங்கள் உள்ளன.
உக்ரைன் தரைப்படையில் சுமார் 2,600 டாங்கிகள் மற்றும் 12,000 கவச வாகனங்கள் உள்ளன.
மேலும், 3,000 க்கும் அதிகமான பீரங்கிகள் உள்ளன.
கப்பல் படையில் 38 கப்பல்கள் உள்ளன. நீர்மூழ்கிக் கப்பல் எதுவும் உக்ரைனிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனின் ஆயுதப்படைகள் ரஷ்யாவுக்கு எதிராக எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒப்பிட்டு அறிகிற போது, கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது.
ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் மூண்டிருப்பது உலகை அதிர வைத்துள்ளது.
உக்ரைனைவிட ரஷியா ஆயுதப்படையினரின் எண்ணிக்கை அதிகமோ அதிகம். ஆனால் ஒன்று, உக்ரைனிடம் இருந்து ரஷ்யா எதிர்நோக்கும் இராணுவ சவால் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும்.
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு ரஷ்யா 1990 களில் பிரிந்த செசன்யா, 2008 ல் ஜார்ஜியா ஆகியவற்றுக்கு எதிராக ரஷ்யா போரிட்டபோது எதிர் கொண்டதை விட கடினமான சவாலை உக்ரைனிடம் இருந்து சந்திக்க வேண்டியது வரும்.
ஏனென்றால் உக்ரைனில் வயது வந்த பெரும்பாலான ஆண்கள் இராணுவப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இதனால்தான் உக்ரைனிடம் இருந்து ரஷ்யா ஒரு நீடித்த எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று போர் நிபுணர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment