மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கல்குடா ப்பிரதேசத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பவுள்ள முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் வித்தியாலயத்தின் தேவைப்பாடுகள் மற்றும் பாடசாலை அமைப்பு தொடர்பிலும் அறபா நகர் அபிவிருத்தி தொடர்பிலும் மக்கள் கருத்தறியும் கலந்துரையாடல் 24.02.2022ம் திகதி வியாழக்கிழமை பி.ப 4.30 மணிக்கு அறபா நகர் ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான அல்ஹாபிழ் நஸீர் அஹமட் அவர்களின் இணைப்புச்செயலாளர் எம்.நாஸர், ஏறாவூர் நகர சபை முன்னாள் தவிசாளர் எம்.தஸ்லிம், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச இணைப்பாளர் மெளலவி P.தாஸீம், பள்ளிவாயல் நிருவாகிகள், புத்திஜீவிகள், பாடசாலை ஆரம்ப முன்னோடிகள், பிரதேச தாய்மார்களும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான அல்ஹாஜ் அல்ஹாபிஸ் நசீர் அகமட் அவர்களின் முயற்சியினால் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குடப்பட்ட கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கல்விக்கோட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் வித்தியாலயத்தின் ஆரம்பக்கட்ட அபிவிருத்தி, மாணவர்களுக்கான வகுப்பறை மற்றும் அதிபர் காரியலயம் அமைப்பதற்காக ரூபா 05 இலட்சம் நிதியினை தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு, செலவுத்திட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்பாடசாலையின் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்யுமுகமாக பாராளுமன்ற உறுப்பினர் நேரடிக்கண்காணிப்பின் கீழ் இப்பாடசாலை உருவாக்கம் இடம்பெறவுள்ளது.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
No comments:
Post a Comment