அன்றாட தேவைக்காக மாத்திரம் சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்யுங்கள் - நுகர்வோரிடம் கேட்டுக் கொண்டுள்ள லிட்ரோ நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 10, 2022

அன்றாட தேவைக்காக மாத்திரம் சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்யுங்கள் - நுகர்வோரிடம் கேட்டுக் கொண்டுள்ள லிட்ரோ நிறுவனம்

(எம்.மனோசித்ரா)

நுகர்வோர் தேவைக்கும் அதிகமாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்கின்றமையால், சந்தைகளில் அவற்றுக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது. எனவே நியமிக்கப்பட்ட விலையில், தேவைக்கு ஏற்ப அன்றாட தேவைக்காக மாத்திரம் சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்யுமாறு லிட்ரோ நிறுவனம் நுகர்வோரிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனமானது அதன் நாளாந்த எரிவாயு நிரப்பும் செயற்பாடுகளையும், விநியோக செயற்பாடுகளையும் தேவைக்கு அதிகமாகவே முன்னெடுத்து வருகிறது.

தற்போது அன்றாட மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு தேவையான சமையல் எரிவாயுவினையும் லிட்ரோ நிறுவனம் வழங்குகிறது.

நுகர்வோரிடம் காணப்படும் சிலிண்டர்களுக்கும், மேலதிகமாக விநியோகம் முன்னெடுக்கப்படுவதால் சந்தையில் எரிவாயுவிற்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.

எனவே நியமிக்கப்பட்ட விலைவில், தேவைக்கு அன்றாட தேவைக்காக மாத்திரம் சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்யுமாறு நுகர்வோரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

எதிர்வரும் தினங்களில் அன்றாட தேவைக்கு ஏற்ப போதுமானளவு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்.

தற்போது சமையல் எரிவாயு பாவனையாளர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு கவலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்தோடு நியமிக்கப்பட் விலையை விட அதிக விலைக்கு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டால் அவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் , 1311 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment