ஜனாதிபதியின் பசுமை விவசாயத் திட்டம் வெற்றியடைந்துள்ளது : இந்திக அனுருத்த - News View

About Us

About Us

Breaking

Sunday, January 9, 2022

ஜனாதிபதியின் பசுமை விவசாயத் திட்டம் வெற்றியடைந்துள்ளது : இந்திக அனுருத்த

ஆரோக்கியமான பாதுகாப்பான மக்களை உருவாக்கும் எதிர்கால சந்ததிக்கு அழகான எதிர்காலம் ஒன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி மேற்கொள்கின்ற பசுமை விவசாயத் திட்டம் இன்று வெற்றியடைந்திருப்பதாகவும் அந்த நல்ல திட்டத்தை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு போவதற்கு நாட்டின் விவசாயிகள், ஊடகங்கள் உட்பட சகலரும் ஜனாதிபதிக்கு தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

சேதனப் பயிர்ச் செய்கை மூலம் சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்ததாக பிழையான மனப்பதிவொன்றை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சி முயற்சிப்பதாகவும் சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கும் திட்டம் ஒன்றை எதிர்க்கட்சி மிக விரைவாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் சுட்டிக் காட்டிய அமைச்சர் அதனூடாக அரசாங்கத்தையும் மக்களையும் சிக்கலுக்குள்ளாக்கி அரசியல் இலாபங்களைப் பெற முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சேதனப் பசளையைப் பயன்படுத்தி பயிர் செய்து இது போன்று வளமான நிறைந்த விளைச்சல் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி விவசாயிகளை பிழையான வழியில் அனுப்புவதற்கு அவர்களுடன் இணைந்து சேர்ந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் இன்று பொய்த்துப் போயுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் "சுபீட்சத்தின் நோக்கு" விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சேதனப் பயிர்ச் செய்கை என்ற சிந்தனையைப் பின்பற்றி திவுலப்பிட்டி தொகுதி விவசாயிகள் சேதனப் பசளையின் மீது நம்பிக்கை வைத்து பயிர் செய்த வயல்களின் விளைச்சலை அறுவடை செய்வதைப் பார்ப்பதற்கான கள விஜயத்தில் இன்று (09) பங்குபற்றிய போது மேற்கண்டவாறு உரையாற்றினார்.

நச்சுத் தன்மை நிறைந்த இரசாயன உரங்களை முழுமையாக நிறுத்தி சேதனப் பசளை மாத்திரம் பயன்படுத்தி சிறந்ததொரு விளைச்சலை பெற்றுக் கொண்டு நாட்டுக்கே முன்மாதிரியாக இன்று திவுலப்பிட்டி தொகுதி மக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிகழ்வில் திவுலப்பிட்டி பிரதேச சபை தலைவர் இந்திக ஜயசிங்க, திவுலப்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் இனோகா தமயந்தி உட்பட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

முனீரா அபூபக்கர்

No comments:

Post a Comment