கின்னஸ் சாதனை படைத்த இலங்கையர் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 8, 2022

கின்னஸ் சாதனை படைத்த இலங்கையர்

393 அடி 3 அங்குல உயரத்தில் ஆளில்லா விமானம் மூலம் வீசப்பட்ட கிரிக்கெட் பந்தை பிடித்து திமுதி ஷனோன் ஜெபசீலன் என்பவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

திமுதி ஷனோன் ஜெபசீலன் என்பவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டு கிரிக்கெட் பந்தில் அதிக கேட்ச் பிடித்ததற்கான சாதனையை தான் முதன்முதலில் முயற்சித்ததாக திமுதி ஷனோன் ஜெபசீலன் கூறினார்.

393 அடி மற்றும் 3 அங்குல உயரத்தில் இருந்து விழுந்த பந்தை வெற்றிகரமாக பிடித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெபசீலன் இரண்டாவது முறையாக சாதனை படைத்துள்ளார்.

மேலும் அவர் 2019 ஆம் ஆண்டு பிரிட்டனின் கிறிஸ்டன் பாம்கார்ட்னர் அமைத்த 374 அடி சாதனையை முறியடித்தார்.

சிறு வயது முதல் கின்னஸ் உலக சாதனை பட்டத்தை முறியடிப்பது எனது கனவு என்று கின்னஸிடம் ஜெபசீலன் கூறினார்.

No comments:

Post a Comment